கடலோர பகுதிகளில் நாளை வரையில் பலத்த தரைக்காற்று வீசும்
தமிழக கடலோர பகுதிகளில் நாளை வரையில் பலத்த தரைக்காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று மாலை வரையில் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் 30 ஆம் தேதி மதியம் வரை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments