உடையும் அபாயத்தில் மறைக்கார் கோரை ஆற்றின் கரை..

0 424

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மறைக்கார் கோரை ஆற்றின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கரையைப் பலப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மறைக்கார் கோரையாறும் கிளைதாங்கி வடிகால் ஆறும் அருகருகே செல்கின்றன.

இந்த இரு ஆறுகள் மீதுதான் அம்மலூர்-ஓவரூர் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பாலம் கட்டுவதற்காக இரு ஆறுகளையும் பிரிக்கும் கரையில் பள்ளம் தோண்டியதில் கரை பலவீனமடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஆற்றில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து நீரோட்டம் தடைபட்டுள்ளதால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்படி உடைந்தால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் என்றும் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments