ஈரோடு பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.13 லட்சம் பணம் மோசடி

0 524

ஆன்லைனில் வேலை கொடுப்பதாக கூறி டெலிகிராமில் விளம்பரம் செய்து பெண்ணிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பகுதி நேர வேலை கை நிறைய வருமானம் என்று டெலிகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து  இளைஞரை தொடர்பு கொண்ட பெண்ணிடம் பேசிய நபர்கள், யூடியூப்பில் வரும் விளம்பரங்களுக்கு லைக் போடுவது, ரிவ்யூ கொடுப்பது, சேர் செய்வது மற்றும் உணவகம், தங்கும் விடுதி ஆகியவற்றை ரிவ்யூ செய்வது போன்ற வேலை என்று கூறி உள்ளனர்.

அதை செய்த பெண்ணிற்கு குறைந்த அளவு பணத்தையும் அனுப்பி நம்ப வைத்து விட்டு தொடர்பு கொண்ட நபர்கள்,  பணம் கட்டி டாஸ்க்கை முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments