தஞ்சாவூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் 7 சவரன் மதிப்பிலான செயின் பறிப்பு

0 620

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 62 வயது பெண் ஒருவர் அணிந்திருந்த 2 தங்கச் செயின்களை இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் பறித்துச் சென்றனர்.

சிசிடிவி-களில் பதிவாகியிருந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து, மதுரையில் பதுங்கியிருந்த அகமது யாசின், ஏசு கவிபாலன் ஆகிய அந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பறித்த 7 சவரன் மதிப்பிலான 2 செயின்களையும், திருட்டு பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments