தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி கடையடைப்பு - தொழில் வர்த்தக சங்கத்தினர் போராட்டம்..

0 736

தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில்  முதல் களியக்காவிளை வரையில் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும்பாலான இடம் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

6 மாதத்திற்கு முன்பே சாலையை செப்பனிட நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments