பிறந்தநாளையொட்டி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற உதயநிதி..

0 828

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியபின், தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அங்கு பணிபுரியும் 100 பணியாளர்களுக்கு அரிசி, எண்ணெய், போர்வை, சக்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகளாக உதயநிதி வழங்கினார்.

பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி, மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி, கல்லூரி மாணவ மாணவியருக்கு உதவித்தொகை,விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments