அடியோடு சாய்ந்த மரம் கூடவே விழுந்த மின்கம்பம்... பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

0 675

ஃபெங்கல்  புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நல்லமாங்குடி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த 50 ஆண்டு பழமையான மரம் விழுந்தபோது அந்த வழியாகச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மரம் அடியோடு சாய்ந்து அருகில் இருந்த மின்வயர்களை அறுத்ததில் மின்கம்பமும் சாய்ந்தது. அப்போது குடை பிடித்தபடி சென்ற ராணி என்ற பெண் மீது மின்வயர்கள் விழுந்ததாகவும், சட்டென்று தள்ளிவிட்டு விலகியதாகவும் அவர் அச்சத்துடன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments