உளுந்தூர்பேட்டையில் கேஸ் அடுப்பில் சமைக்க முயன்றபோது தீ விபத்து..

0 531

உளுந்தூர்பேட்டையில், புதுத்தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், பெண் ஒருவர், சமையல் கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியது.

அடுப்பில் இணைக்கப்பட்டிருந்த குழாய் திடீரென கழன்றதில், அதில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்து வெளியேறிய நிலையில், அங்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர், கேஸ் சிலிண்டரின் வால்வை மூடி, தீயை கட்டுப்படுத்தினர்.

கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தால், தண்ணீரை ஊற்றி அணைக்காமல், சணலால் ஆன சாக்குப்பையைப் போட்டு அணைக்க வேண்டும் என, கேஸ் நிறுவனத்தினர் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments