ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

0 1492

ஐயப்ப சாமி குறித்து இழிவுபடுத்தும் விதமாக பாடல் பாடி உள்ள கானா இசைப் பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக இசைவாணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த மார்கழியில் மக்களிசை என்ற மேடை நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி சில மாதங்களுக்கு முன்பு பாடிய இந்த பாடல் தான் தற்போது திடீர் சர்ச்சையாக மாறி இருக்கிறது.

இசைவாணியின் இந்த பாடல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதால் , கார்த்திகைக்கு விரதம் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் மனதை காயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி ஆகிய இருவர் மீதும் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் சிலுவை அணிந்து இந்து கடவுளை இசைவாணி இழிவுபடுத்தி பாடி இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளனர் .

தன்னை பெரியாரின் பேத்தி என்று கூறி ஐயப்ப சாமியை இழிவுபடுத்தி பாடிய அதே இசைவாணி, வேறொரு பாடலில் இயேசுவை பெருமைப்படுத்தி பாடி இருப்பதாக தெரிவித்துள்ள ஐயப்ப பக்தர்கள், கானா பாடலை பாரபட்சமாக பாடி மத மோதலை தூண்டும் இசைவாணி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் மேடைப் பாடகி இசைவாணியின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு சிலர் கொலை மிரட்ட்ல் விடுத்து வருவதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது சார்பில் பாதுகாப்பு கேட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments