போலி பத்திரம் வைத்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்..

0 396

ஸ்ரீரங்கத்தில் 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த புகாரில் கோவிந்தராஜ் என்பவரையும் அவரது மனைவியையும் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர்.

ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 19 ஏக்கர் நிலத்தை பராமரித்து வந்த கோவிந்தராஜ், அதில் 5 ஏக்கர் நிலத்தை தேவராஜ் என்பவருக்கு போலி பத்திரம் தயார் செய்து விற்றதாக கூறப்படுகிறது.

அந்த பத்திரம் போலியானது என தெரியவந்ததையடுத்து பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டும் தராததால், தேவராஜ் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிந்தராஜ் பாஜக விவசாய அணியின் மாநில துணைத் தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments