அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேர் கைது

0 296

திண்டிவனம் அடுத்த கீழ் கூடலூர் வனசரக எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 3 நரிக்குறவ இளைஞர்களை கைது செய்தனர்.

தொடர்ச்சியாக பறவைகள், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்தியபோது, 3 நாட்டு துப்பாக்கிகள், 28 நாட்டு வெடிகள், 8 கத்திகள், வனவிலங்குகளுக்கு தரப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments