கத்திக்குத்துக்கு ஆளான கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்... மருத்துவர்க்கு 6 வாரங்கள் விடுப்பு

0 601

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமைனையில் நோயாளியின் உறவினர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜி, உடல் நலன் தேறி வீடு திரும்பினார்.

பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்பவரின் மகன் விக்னேஷ் தாய்க்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்று கூறி மருத்துவரை கத்தியால் குத்தியதில் 7 இடங்களில் காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவருக்கு 6 வாரங்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments