274 நாள்களில் 12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த நீண்டதூர பயண ஆர்வலர்..!

0 1121
274 நாள்களில் 46,239 கிலோமீட்டர் பயணித்த நீண்டதூர பயண ஆர்வலர்..!

எகிப்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், நீண்ட தூர பயண ஆர்வலருமான ஒமர் நோக் என்பவர், 274 நாள்களில் 46 ஆயிரத்து 239 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் வந்தடைந்தார்.

30 வயதான அவர், சவூதி அரேபியா, ஈரான், ஆப்கனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சீனா என 12 நாடுகள் வழியே ஜப்பான் சென்று சேர்ந்தார்.

பல இடங்களில் வாகனங்களில் லிஃப்ட் கேட்டும், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளில் குதிரை மற்றும் ஒட்டகங்களில் பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தேவைகளைக் குறைத்துக்கொண்டு ஒருநாளைக்கு 25 டாலர் அளவுக்கே செலவழித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இரண்டு வாரங்களில் 88 டாலர் மட்டுமே செலவழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments