"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்

0 16456

மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யுசிஜி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.

தேசியக் கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments