4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பரம்பிக்குளம் அணை

0 1974

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை, 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது வந்தது. இந்நிலையில், அணையின் முழு கொள்ளளவான 72 அடியை நீர்மட்டம் எட்டியது.

நீர்வரத்து ஐந்தாயிரம் கனஅடியாக இருக்கிறது. பாதுகாப்பு கருதி, 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,800 கனஅடி உபரிநீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. காண்டூர் கால்வாய் வழியாகவும் 1,200 கனஅடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு திறந்து விடபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments