தொடர் மழையால் அடையாறில் நீர்வரத்து அதிகரிப்பு - மணல் திட்டில் சிக்கிய தம்பதிகள்.

0 603

சென்னை பட்டினப்பாக்கம் அருகே, அடையாறு முகத்துவாரப் பகுதியில் நண்டு பிடிக்கச் சென்ற ஆதிகேசவன்- செல்வி தம்பதி, நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றின் மையப்பகுதியில் இருந்த மணல் திட்டில் தஞ்சமடைந்தனர்.

ஆதிகேசவனின் செல்போனில் பேலன்ஸ் இல்லாத நிலையில், சற்று நேரத்தில் சுவிட்ச்-ஆப் ஆனதால் மற்றவர்களை உதவிக்கு அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பெற்றோர் வீட்டிற்குத் திரும்பாததால் அவர்களைத் தேடி படகில் சென்ற மகன், அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

4 மணி நேரமாக மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த தம்பதியை மெரினா மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments