டெல்லி கணேஷ் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி.!

0 768

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை ராமபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், செந்தில், ராதாரவி, இயக்குநர்கள் லிங்குசாமி, வெற்றிமாறன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சங்கம் சார்பில் நடிகர் கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது...அது எங்கள் பாக்கியம்... 

நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பிற்காக பல்கேரியாவில் உள்ளதால் அவரது சார்பாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அஞ்சலி செலுத்தினார். டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் மணிகண்டன், பின்னர் டெல்லி கணேஷின் குரலில் மிமிக்ரி செய்தார்.

நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments