திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் சாலை விபத்து.!

0 482

திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்துகொண்ட  மணச்சநல்லூர் எம்.எல்.ஏ மகள் திருமண விழாவிற்காக நடப்பட்ட தி.மு.க கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற நின்றுக்கொண்டிருந்த மினி லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சுமார் 20 கிலோமீட்டர் வரை  நடப்பட்டிருந்த கட்சி கொடிகளை மினி லாரியில் வந்த ஒப்பந்த ஊழியர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.

எந்தவித எச்சரிக்கையும் வைக்காமல் கொடிகளை அகற்றிக் கொண்டிருந்த நிலையில்  அந்த வழியாக வந்த  டிப்பர் லாரி மோதியதில் மினி லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தேசிய நெடுஞ்சாலைக்கு குறுக்கே விழுந்தது. அதில் மினி லாரி டிரைவர் உள்ளிட்ட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments