நண்பனுடன் சண்டையிட்ட காளையை விரட்டிய வளர்ப்பு நாய் ..!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தன்னுடன் ஒரே வீட்டில் வளரும் காளையுடன் மற்றொரு காளை சண்டையிட்டதைக் கண்ட நாய் ஒன்று விடாமல் குரைத்து சண்டையை விலக்கி விட முயற்சி செய்த காணொளி வெளியாகி உள்ளது.
காரைக்குடி -மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் மேய்ச்சலுக்கு வந்த இரண்டு காளைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட நிலையில், நாய் ஒன்று மாடுகளின் அருகிலேயே நின்று விடாமல் குரைத்து. இதனால் காளைகள் சண்டயை நிறுத்தி மேய்ச்சலை தொடர்ந்தன.
Comments