நெடுஞ்சாலையில் 17 இடங்களில் விமான ஓடுதளங்கள் அமைக்கப்படும் - நிதின் கட்கரி

0 350

17 இடங்களில் நெடுஞ்சாலைகளை விமான ஓடுதளங்களாகப் பயன்படுத்தும் வசதி செய்யப்படும் என மத்தியச் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், பாரத்மாலா திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 44ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆறாயிரத்து 320கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக 17 இடங்களில் நெடுஞ்சாலைகளையே விமான ஓடுதளங்களாகப் பயன்படுத்துவதற்கு வசதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்நூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் எந்த விமான நிலையமும் இல்லாத இடங்களில் இவ்வாறு நெடுஞ்சாலையில் விமான ஓடுதளங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். விமானம் தரையிறங்கும்போதும், மேலெழும்போதும் அந்த நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments