பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளான விவகாரத்தில் பாவ மன்னிப்பு நடைமுறையை ரத்து செய்ய தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

0 830

தேவாலயப் பாதிரியார்களால் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளான விவகாரத்தில், பாவ மன்னிப்பு நடைமுறையையே ரத்து செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. கேரளா, பஞ்சாப் மாநிலங்களில்  பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணும், கன்னியாஸ்திரியும் தேவாலயப் பாதிரியார்களால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பாவ மன்னிப்பு பெறுவதற்காக தமது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை கூறிய போது, அதை பாதிரியார்கள் தவறாகப் பயன்படுத்தி பலமுறை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் ரகசியத்தை கசியவிடுவதாக மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, ஆண்களிடம் பெண்கள் ரகசியத்தை பகிர்ந்தால், அது ஆபத்து என்றும் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பாவ மன்னிப்பு நடைமுறையையே நீக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் மத்திய உள்துறைக்கும், கேரள, பஞ்சாப் மாநில அரசுகளுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments