மதுபோதையில் காவலரை தாக்கியதாக வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது

0 538

சென்னையில், காவல்நிலையத்தில் வைத்து காவலரை தாக்கியதாக வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடையில் சிலர் தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலில் இரவு ரோந்து போலீஸார் அங்கு சென்று காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர்.

அப்போது வாக்குவாதம் ஏற்படவே அவர்களை ஓட்டேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் காவலர் நிஜித்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, 4 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தது உறுதியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments