மெகுல் சோக்சி மட்டுமன்றி 28 இந்தியர்கள் ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்

0 724

மெகுல் சோக்சி மட்டுமன்றி 28 இந்தியர்கள் ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீரவ்மோடியுடனான வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்சிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆண்டிகுவா ((Antigua)) நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையாகியுள்ள நிலையில் அந்நாட்டுப் பிரதமர் கஸ்டன் பிரவுனே ((Gaston Browne)) விளக்கம் அளிக்க அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆண்டிகுவா குடியுரிமைக்கு இந்தியர்கள் 28 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டிகுவா நாட்டில் தேசிய வளர்ச்சி நிதி, அரசு அங்கீகார மனைகள், மற்றும் வணிகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments