விநாயகர் சதுர்த்தியின்போது சிலை நனையாமல் காக்கப் பிளாஸ்டிக் பயன்பத்த மும்பை மாநகராட்சி அனுமதி

0 413

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிள்ளையார் சிலைகளை மழையில் நனையாமல் காப்பதற்குப் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பருவமழைக் காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் மழையில் நனையாமல் காக்கப் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் அதுபோலப் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.

அதேநேரத்தில் விழாவின்போது மேடை அலங்காரத்துக்கும் உணவுப் பண்டங்கள் வழங்குவதற்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments