சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான நில அளவை பணி 95 விழுக்காடு நிறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 937

பசுமைவழிச்சாலை திட்டத்துக்காக 95 சதவிகித நில அளவீட்டுப் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கான தண்ணீர் மாதந்தோறும் வந்து சேரும் என்று உறுதியளித்தார்.

சேலம் - சென்னை இடையிலான பசுமைவழிச்சாலை குறித்து பேசிய முதலமைச்சர், 8 வழிச்சாலை திட்டத்துக்கு 9 சதவிகிதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், ஆனால் அவர்கள் நிலத்தை தர மறுக்கவில்லை என்றும் விளக்கமளித்தார். மேலும், 8 வழிச்சாலை திட்டத்துக்காக 95 சதவிகித நில அளவீட்டுப்பணிகள் நிறைவுற்றிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

 

திருப்பூரில் யூடியூப் வீடியோ தளத்தைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்து கிருத்திகா என்பவர் உயிரிழந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் நடக்காதவகையில் காவல்துறை மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments