தமிழகத்தின் உணவு உற்பத்தி 11% அதிகரிப்பு : முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தின் உணவு உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 லட்சத்து 59 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளில் இயற்கை பேரிடர்களால் நேர்ந்த பயிர்ச் சேதங்களுக்கு, 29 லட்சம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டு, 14 புதிய உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டதுடன், 3 புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments