ஈரோடு காவல்துறை சார்பில் நடத்திய ஆயுத கண்காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியில் பழமையான துப்பாக்கிகள் முதல் நவீனரக துப்பாக்கிகள் வரை பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்ட எஸ்பி ஜவஹர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளும் ஆயுத கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
சினிமா படங்களில் மட்டும் பார்த்து வந்த Ak47 மற்றும் கண்ணீர் புகை குண்டு,கை துப்பாக்கி,துப்பாக்கி குண்டுகள்,பிளாஸ்டிக் துப்பாக்கி குண்டுகள்,பொது இடத்தில் ஏற்படும் கலவரத்தை கட்டுப்படுத்த கேஸ் குண்டுகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றன.
Comments