தெருநாய்களுக்கு விஷ உணவு கொடுத்து கொன்ற நபர் - காவல் நிலையத்தில் புகார் அளித்த தன்னார்வலர் ..

0 473

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்து கொன்றதாக பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் சிலவற்றை தனது வீட்டில் பராமரித்து வரும் மோகன், அவரது எதிர்வீட்டில் வசிக்கும் பாலாஜி கொடுத்த விஷம் கலந்த உணவால் 2 நாய்கள் இறந்ததாக திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments