குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானிடம் காவல்துறை விசாரணை

0 908

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூப்பர் இர்பான், அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்ட நிலையில் செம்மஞ்சேரி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ மருத்துவமனை பிரசவ அறையில் எடுக்கப்பட்ட வீடியோவை இர்பான், யூடியூப்பில் பதிவிட்டதையடுத்து மருத்துவ இயக்குநரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்திய செம்மஞ்சேரி போலீசார், இர்பான்மனைவியின் மருத்துவம் சார்ந்த ஆவணங்கள், பிரசவத்தின்போது பணியில் இருந்தவர்களின் விவரங்களையும் கேட்டறிந்து விசாரணையை தொடங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments