கொங்குநாடு ஆணழகன் 2024 போட்டியில், ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்.!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் எஸ்டேட் நிர்வாகம் மற்றும் பைஸ் ஜிம் தலைமையில் நடைபெற்ற மிஸ்டர் கொங்குநாடு ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 19 முதல் 40 வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றநிலையில் 50 முதல் 75 கிலோ வரையிலான உடல் எடை கொண்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கப்பட்டன.
Comments