ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம்... சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்

0 1179

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம் என பேட்டியளித்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதேப்போன்று, சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று என்கவுன்டர் மிரட்டல் விடுத்ததாக திருவொற்றியூர் உதவி கமிஷனர் இளங்கோவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்த உதவி கமிஷனர் அந்த ஆணையை சென்னையிலுள்ள மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments