தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

0 1151

வணிக உலகிலும், அதற்கு அப்பாலும் அழியாத முத்திரையைப் பதித்தவர் மறைந்த ரத்தன் டாடா.. மோட்டார் வாகனங்கள் முதல், தகவல் தொழில்நுட்பம் வரை பல துறைகளில் சாதனை படைத்த தொழிலதிபரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு....

டாடா குழுமத்தின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் தொழிலதிபர் ரத்தன் டாடா. பெரும் கோடீஸ்வரராக இருந்தபோதும் ஏழை- எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடன் வாழ்ந்தவர் அவர்.

மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாடா, படிப்பை முடித்தபின் 1961ம் ஆண்டில் டாடா குழுமத்தில் இணைந்தார். டாடா ஸ்டீல் நிறுவனத்தை அவர் நிர்வாகம் செய்து வந்தார்.

1991ல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பை ஏற்ற அவர், 21 ஆண்டுகளில் பல புதிய திட்டங்களைப் புகுத்தி அதன் வருவாயை 50 மடங்கு அதிகரிக்கச் செய்தார். கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

நடுத்தர மக்களின் கனவை நனவாக்க நானோ கார் தொடங்கியது முதல் குஜராத்தில் தொழிற்சாலையை நிறுவி மின்சாரக் கார்களை உற்பத்தி செய்தது வரை இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழிலை உலகளவில் உயர்த்தி டாடா குழுமத்தின் அசுர வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தார் ரத்தன் டாடா.....

ஸ்நாப் டீல், ஓலா, Xiaomi போன்ற நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்ததுடன், 30க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களையும் தொடங்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாக விளங்கினார். டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் தற்போது 8 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தொழில்களில் கிடைத்த லாபத்தில் 60 சதவீதம் வரை தன்னார்வ நிறுவனங்களுக்கும், கல்வி அமைப்புகளுக்கும் நன்கொடையாக வழங்கினார். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண். பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. இங்கிலாந்து ராணிஅளித்த கவுரவம் உள்பட பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார் டாடா.

மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தபோதும், பெரும் புகழும் பெயரும் பெற்ற போதும், மனித நேயம் மிக்க எளிமையான மனிதராக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments