ஏமனை நோக்கி அமெரிக்க, இங்கிலாந்து படைகள் தாக்குதல்.. ஹமாஸ், ஹெஸ்புல்லாவை அடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு குறி..!
லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமனை நோக்கி அமெரிக்க, இங்கிலாந்து கூட்டுப் படைகள் புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளன.
பாலஸ்தீனத்தில் ஹமாஸையும், லெபனானில் ஹெஸ்புல்லாவையும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், செங்கடலில் ஆதிக்கம் செலுத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, ஏமன் தலைநகர் ஸனா மற்றும் ஹுதைதா நகரங்களின் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ருல்லாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில், ஈரான் மதத் தலைவர் காமேனி பங்கேற்று, இஸ்ரேலை எச்சரித்த நிலையில், ஏமன் மீதான புதிய தாக்குதல் சர்வதேச அளவில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Comments