மொசாட் தலைமையகம் மீது தாக்குதல்.. ஈரான் செய்த தவறுக்கு உரிய பதில் அளிக்கப்படும் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

0 515

ஆப்ரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம், விமானதளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசா போரில் பாலஸ்தீனத்திற்கு உதவும் ஹெஸ்பொல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உலகின் சக்தி வாய்ந்த அமைப்பாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் தலைமையகம், நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் ஆகியவற்றை குறிவைத்து ஈரானில் இருந்து சுமார் 180 ஏவுகணைகள் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மொசாட் தலைமையகம் அருகே மிகப்பெரிய பள்ளம் தோன்றிய நிலையில், அதனை சுட்டிக்காட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான்செய்த தவறுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments