நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

0 947

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே ஓட்டுபவர் யாருமின்றி சாலையில் பைக் மட்டும் தனியாக தறிகெட்டு ஓடிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு

ஓட்டுபவர் யாரும் இன்றி சாலையில் பைக் மட்டும் மின்னல் வேகத்தில் சென்ற திகில் காட்சிகள் தான் இவை..!

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள மக்கிரி பாளையம் பிரிவு சாலையில் மோடமங்கலத்தில் இருந்து சௌந்தர்ராஜன் நந்தினி தம்பதியினர் பள்ளிபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சங்ககிரியில் இருந்து வேகமாக வந்த மாருதி எர்டிகா கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் பின்னால் மோதியது. இடித்த வேகத்தில் கார் நின்று விட இரு சக்கர வாகனத்தில் இருந்த தம்பதிகள் சாலையில் விழுந்தனர். அந்த பைக் மட்டும் சாலையில் தனியாக ஓடியது

சாலையில் தனியாக பைக் மட்டும் செல்வதை கண்டு மக்கள் சாலையை நோக்கி ஓடிவந்தனர்

விபத்தில் சிக்கிய பைக் ஆளில்லாமல் சாலையில் தனியாக ஓடிவந்ததை கண்டு சிலர் மிரண்டு நின்றனர்

தம்பதிகள் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பைக் மட்டும் ஆளே இல்லாமல் நீண்ட தூரம் சென்று சாலைத்தடுப்பில் மோதி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

விபத்து குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஹரியானா கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடியதும் இதே காவல் நிலைய எல்லையில் தான் என்பது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments