புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு.. பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. !!
தமிழ்நாடு அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வைகோ, திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அதில் கலந்துகொண்டனர். விழாவில் செந்தில் பாலாஜி, சேலம் பனமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் இணைந்து அமைச்சர்கள், புதிய அமைச்சர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மீண்டும் அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டது.
அதேபோல், கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறையும், ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.
Comments