தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. துணை முதலமைச்சராக உதயநிதி நியமனம்.. !!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்குவதோடு, துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வழங்குமாறும், செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்கவும் முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர்மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடிக்கு வனத்துறையும், மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், கயல்விழி செல்வராஜ்க்கு மனிதவளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும்,ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் தொல்லியல் துறைகளுடன் சுற்றுச்சூழல்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Comments