தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
ராகுல் காந்திக்கு எம்.எஸ்.பி.யின் விரிவாக்கம் தெரியுமா? - அமித் ஷா கேள்வி
ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையான எம்.எஸ்.பி-யின் விரிவாக்கம் என்ன என்பதுகூட தெரியுமா? என உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரியானாவின் ரெவாரியில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி ஒரு பொய் பேசும் இயந்திரம் என்றும், எவை எவை காரீப் பயிர்கள்? எவை எவை ராபி பயிர்கள் என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா? என்றும் வினவியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு குவிண்டால் நெல் ஆயிரத்து 310- ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
Comments