நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு

0 419

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை அருகே உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த பேக்கரியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டினர்.

தின்பண்டங்கள் தயாரிக்கப்படும் இடத்தில் சமையல் செய்யும் உபகரணங்கள் சுகாதாரமற்றும், ஈ மொய்த்தப்படியும் இருந்த நிலையில், காலாவதி தேதி இல்லாமல் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments