தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்... நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்

0 685


தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்

போலீசார் எச்சரித்தும் நிற்காமல் சென்றதால் துப்பாக்கிச்சூடு

போலீசாரை கடப்பாரையால் தாக்க முயற்சி - என்கவுன்டர்

போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஓட்டுநர் உயிரிழப்பு - ஒருவர் காயம்

கண்டெய்னரில் இருந்த மேலும் 5 பேர் துப்பாக்கி முனையில் கைது

கேரளா ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல் சிக்கியது

கொள்ளையர்கள் கடப்பாரையால் தாக்கியதில் எஸ்.ஐ காயம்

நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரியில் இருந்த காரில் கட்டுக்கட்டாக பணம் எனத் தகவல்

வாகனங்கள் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசாரும் துரத்திச்சென்று நிறுத்த முயன்றபோது அவர்கள் மீதும் மோத முயற்சி

கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடிய நிலையிலும், துப்பாக்கியால் சுட்டு மடக்கிய போலீசார்

கண்டெய்னர் லாரியில் 7 பேர் இருந்த நிலையில் லாரி ஓட்டுநர் என்கவுன்டர் - 6 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்

கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 ஏ.டி.எம் மையங்களில் ரூ.65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது

கொள்ளையடித்த பணத்துடன் தப்பி வந்த கண்டெய்னர் லாரியை மடக்க முயன்றபோது தாறுமாறாக ஓட்டியதால் பதற்றம்

இதையடுத்து, கண்டெய்னர் லாரியை துரத்திச் சென்று, துப்பாக்கியால் சுட்டு மடக்கி, வடமாநில கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தனர்

போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில், லாரியை நிறுத்தாமல் இயக்கிய ஓட்டுநர் உயிரிழப்பு - ஒருவர் காயம் - 5 பேர் துப்பாக்கி முனையில் கைது

வெல்டிங் மிஷின் மூலமாக கொள்ளையடிக்கும் ராஜஸ்தான் மாநில கொள்ளை கும்பல் சிக்கியுள்ளதாக போலீசார் தகவல் 

கண்டெய்னருடன் சிக்கிய 2 பேர் வட மாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என தகவல்

கேரளாவில் கொள்ளையடித்து விட்டு, தப்பி வந்தவர்கள் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி தகவல்

கண்டெய்னர் லாரிக்குள் 4 பேர் இருந்ததாகவும், அதில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாகவும் தகவல்

கடப்பாரையை கொண்டு போலீசாரை கொள்ளையர்கள் தாக்கியபோது, தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக தகவல்

போலீசார் துரத்தியும் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை விரட்டிப்பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments