தனிநபர் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மண்டபம் இடிக்க உத்தரவு.. அதிகாரிகளை தடுத்து ஊர்மக்கள் போராட்டம்..

0 534

உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட காளியம்மன் கோயில் மண்டபத்தை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கச்சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டப்பட்டதாக ஆறுமுகம் என்பவர் தொடர்ந்த வழக்கில், மண்டபத்தை அகற்றி இடத்தை அவரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது.

அவகாசம் கொடுத்தால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டதையடுத்து, அதிகாரிகள் மண்டபத்தை இடிக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments