தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சென்னை அருகே பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலை எனக் கூறி விற்க முயன்ற ரவுடி உள்பட 3 பேர் கைது
பித்தளை சிலைகளின் கிரீடத்தில் மட்டும் சில உலோகக் கலவைகளை தடவி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றதாக சென்னை, டிபி சத்திரத்தை சேர்ந்த ரவுடி ஆகாஷ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி ஒருவருக்கு ஆகாஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஆடியோ வெளியாதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தாகவும், அப்போது ஆகாஷின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் பழங்கால சிலைகளின் படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலை எனக்கூறி விற்க முயன்றது உறுதியானதை அடுத்து, ஆகாஷ்க்கு சிலைகளை சப்ளை செய்த ராஜேஷ், சிலையை தனது வீட்டில் வைத்திருந்த இர்ஷாத் முகமது ஆகியோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments