கள்ளக்குறிச்சியில் காரில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் காரில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது காரில் கடத்தப்பட்ட 50 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் ஒப்பந்ததாரரிடம் இருந்து நேரடியாக ரேஷன் கடைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டவை என கூறப்படுகிறது.
Comments