சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி

0 1150

திருவொற்றியூர் நெய்தல் நகரில் மழை பெய்த அரை மணி நேரத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலைப்பணிகளை தடுத்து நிறுத்திய கவுன்சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிகாரி ஒருவர் , உதவி ஆணையரின் ஆய்வின் போது முன்னுக்குப்பின் முரணாக பேசி சிக்கிக்கொண்டதால் , தான் வேலையை விட்டே போகிறேன் என்று கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார்

பெருநகர சென்னை மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் விம்கோ நகர் நெய்தல் நகர் பகுதியில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை முதலிலே மழை பெய்து வந்த நிலையில் 7:30 மணி வரை மழை பெய்து ஓய்ந்தது . காலை 8 மணி அளவில் அங்கு புதிய சாலை அமைக்க பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது

அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் அங்கு வந்த 5 வார்டு திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம், மழை பெய்து வரும் நிலையில் எதற்காக தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணியை செய்தீர்கள் என மாநகராட்சி உதவி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனையும் மீறி 25 மீட்டர் வரை புதிய சாலையை அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மண்டல குழு கூட்டத்தில் இது குறித்து பேசிய கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

மழை நேரத்தில் போடப்பட்ட சாலையின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் சாலை தரமாக இல்லை என்றால் உடனடியாக சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மீதும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் பாபு,
மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . சாலை தரமாக இருந்தால் எனக்கு தூக்கு தண்டனை கூட கொடுங்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.

இதனை அடுத்து புதிதாக சாலை போடப்பட்ட இடத்தை திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் சுரேஷ் , மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபுவுடன் வந்து சாலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . அப்போது சாலை அமைக்க அனுமதி கொடுத்த உதவி செயற்பொறியாளர் பாபு , இனி சாலை போடும் இடத்திற்கே நான் வரமாட்டேன் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினார்

பின்னர் அவரை சமாதானப் படுத்திய உதவிய ஆணையர் சுரேஷ் 14 வார்டுகளிலும் பணிகளை பார்வையிட வேண்டும் என்றால் நான் ரோபோ ரஜினி ஆக தான் இருக்க வேண்டும் என நகைச்சுவையாக பேசினார் . பின்னர் சாலையின் தரத்தை ஆய்வு செய்வதற்கென்று மாநகராட்சி குழு இருப்பதாகவும் அவர்களுக்கு தகவல் அளித்து சாலையை தரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்

கோபமாக இருந்த கவுன்சிலர் சொக்கலிங்கத்தை, கூல் செய்வதற்காக நான் கலெக்டராக வரும் பொழுது நீங்கள் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இருப்பீர்கள் என்று கூறி சமாதானப்படுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments