தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
தீபாவளி சீட்டு மோசடி குறித்து புகாரளிக்க வந்தவர்களுக்குள் வாக்குவாதம்..
தீபாவளி சீட்டு மோசடி குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்த மக்கள், மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் தம்பியும் தங்களுடன் புகாரளிக்க வந்துள்ளதாகவும் அவரை விசாரிக்க வலியுறுத்தியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிந்தாரிப்பேட்டை மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் அண்ணாமலை என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன் ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில் தன்னிடமும் அண்ணாமலை 13 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவரது தம்பியும் புகாரளிக்க வந்திருந்தார்.
மக்கள் அவரை சூழ்ந்த நிலையில் போலீஸார் அவரை மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Comments