கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

0 1124

கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பிரசாதக்கடைக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று கடையில் இருந்த லட்டு மற்றும் பஞ்சாமிர்த டப்பாக்களை அப்படியே எடுத்து சாப்பிட்டு விட்டு கடையையும் சேதப்படுத்திச்சென்றது

வெள்ளியங்கிரி மலைக்கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பிரசாத கடைக்குள் புகுந்து யானையார் உணவு வேட்டையாடிய காட்சிகள் தான் இவை..!

கோவை ஆலந்துறை அடுத்த வெள்ளிங்கிரி மலை கோவில் பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து செல்வது வழக்கம். இந்த முறை பகலில் வந்த காட்டு யானை ஒன்று கோவிலின் அன்னதான கூடத்தை தட்டிப்பார்த்த கையோடு, அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரசாத கடையின் கண்ணாடி பெட்டியை அடித்து நொறுக்கி உருட்டி அதில் இருந்த பொருட்களை வேட்டையாடியது.

கடையின் உரிமையாளரான பெண் பக்கத்தில் உள்ள கோவிலுக்குள் பதுங்கி இருந்தவாறு கணேசா... கணேசா.. என்று யானையை விரட்டி முயன்றார்..

லட்டுக்களையும், பஞ்சாமிர்த டப்பாவையும் அப்படியே விழுங்கிய யானை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை

போகிற போக்கில் ஸ்கூட்டர் ஒன்றை தட்டி விட்டு கடையின் பக்கவாட்டில் முட்டியது

பக்தர்களும் கடைக்காரர்களும் கூச்சலிட்டதால், கடையின் பக்கம் சென்று தகர சீட்டை உடைத்து , மிச்சம் மீதி இருந்த உணவு பொருட்களையும் திண்று தீர்த்தது

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே யானையார் காட்டை நோக்கி நடையை கட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments