டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

0 3560

அமேசானில் ஹைடிராலிக் கட்டரை ஆர்டர் செய்து வாங்கி , சத்தமில்லாமல் வீடுகளின் பூட்டுக்களையும் லாக்கரையும் வெட்டி நகைப்பணம் கொள்ளையடித்த கர்நாடக கொள்ளையன் தலைமையிலான கும்பலை டெல்டா போலீசார் சுற்றிவளைத்துள்ளனர்.

இரும்பு பூட்டு எல்லாம் இந்த ஹைட்ராலிக் கட்டருக்கு முன்னால் கரும்பு மாதிரி என்று போலீசாரிடம் சிக்கிக் கொண்ட டெல்ராவை கலக்கிய கே.ஜி.எப் நாகா பாயின் கொள்ளை கும்பல் இது தான்..!

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருத்துறைபூண்டியை சேர்ந்த குமரேசன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது பெரிய நெட் ஒர்க் அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

கன்னியாகுமரியை சேர்ந்த வேல்முருகன். கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த நாகா என்கிற ஸ்கெட்ச் நாகராஜ் ஆகியோருடன் இணைந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூன்று பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

மூன்று பேரும் சேர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் ஐயப்பன் சிலையை திருடி தங்க சிலை என நினைத்து விற்க முயற்சிக்கும் போது மாட்டி கொண்டு தப்பி வந்து பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்ததாக கூறப்படுகின்றது.
மன்னார்குடியில் ஒரு வீட்டில் லாக்கருடன் நகைகளை திருடிச்சென்ற இந்த கும்பல், லாக்கரை உடைத்து தங்க நகைகளை திருடி விட்டு லாக்கரை குளத்தில் வீசி விட்டு சென்றதும் தெரிகிறது. குளத்திற்குள் இறங்கி லாக்கரை போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததனர்.

பூட்டப்பட்ட வீடுகளின் எந்த வகை பூட்டாக இருந்தாலும் அவற்றை சத்தமே இல்லாமல் கட் செய்வதற்காக, அமேசானில் ஆர்டர் செய்து சிறிய அளவிலான ஹைட்ராலிக் கட்டர் ஒன்றை வாங்கி உள்ளனர்.

அதனை பயன்படுத்தி பீரோ, லாக்கர். பூட்டு. இரும்பு கதவு ஆகியவற்ரை எளிதாக வெட்டி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்த போலீசார் இரும்பு கம்பி ஒன்ரை சில வினாடிகளில் கட் செய்து காண்பித்தனர்

கைது செய்யப்பட்ட கே.ஜி.எப்ஃ நாகா, குமரேசன், வேல்முருகன் ஆகிய 3 பேருக்கும் 15 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு உள்ளதாக தெரிவித்த போலீசார் , 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதிகமாக நகைப்பணத்தை வீட்டில் வைப்பதை தவிர்த்து பாதுகாப்பான வங்கிகளில் வைக்கும்படி அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments