திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுவன் மீது 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் புல்லட்டை ஏற்றி இறக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் தட்டுத் தடுமாறி எழ முடியாமல் துடித்தபோதும் புல்லட்டை ஓட்டி வந்த மாணவன், கீழே இறங்கவே இல்லை.
புல்லட்டை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன், திருச்சி கே .கே . நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகராஜின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
Comments