உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்

0 538

போலி பதிவெண் மற்றும் உரிய பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இயக்கப்பட்ட வரதன் ஏர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவாடியில் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து சுங்கக் கட்டணத்திற்காக நின்றபோது அந்த பேருந்தில் இருந்த ஃபாஸ்டேக் வேறு ஒரு பேருந்திலும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்திற்கும், மோட்டார் வாகன ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், புதுச்சேரி பதிவெண் கொண்ட அப்பேருந்து, மற்றொரு ட்ராவல்ஸ் பேருந்தின் பதிவெண்ணை தவறாக பயன்படுத்தி ஓட்டி வந்ததும், சாலை வரி கட்டாமல் ஒரே பேருந்தின் ஆவணத்தை கொண்டு நான்கு பேருந்துகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி இயக்கி வந்ததும் அதன் மூலம் பல லட்சம் ரூபாயை வருவாய் ஈட்டிவந்ததும் தெரியவந்தாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments