அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு

0 351

2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் வேலை வாங்கித் தருவதாக 65 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அஸ்தம்பட்டியை சேர்ந்த கோரைப்பாய் வியாபாரி முனுசாமி என்பவர் அளித்த புகாரில், கடந்த 2015 ஆம் ஆண்டு 20 பேரிடம் இருந்து பணம் வசூலித்து 65 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், வேலை வாங்கிக் கொடுக்காத நிலையில், 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மட்டுமே திருப்பியளித்ததாகவும், மீதி பணத்தை கேட்ட தன்னை அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments